உள்ளூர் செய்திகள்
தி.மு.க. வேட்பாளர் கே.கே.நகர் தனசேகரனுக்கு தேர்தல் அதிகாரி வெற்றி சான்றிதழ் வழங்கினார்.

மாநகராட்சி தேர்தல்- தி.மு.க. வேட்பாளர் கே.கே.நகர் தனசேகரன் அதிக வாக்குகள் பெற்று வெற்றி

Published On 2022-02-23 15:51 IST   |   Update On 2022-02-23 15:51:00 IST
தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினரான கே.கே. நகர் க.தனசேகரன் சென்னை மாநகராட்சி தேர்தலில் விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 137-வது வார்டில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டார்.

போரூர்:

தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினரான கே.கே. நகர் க.தனசேகரன் சென்னை மாநகராட்சி தேர்தலில் விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 137-வது வார்டில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டார்.

இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் பழனியை விட கூடுதலாக 10ஆயிரத்து 583 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் தனசேகரனை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க, பா. ஜ.க உட்பட அனைத்து அரசியல் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்களும் டெபாசிட் இழந்துள்ளனர். தமிழ்நாட்டில் சென்னை உட்பட 21 மாநகராட்சிகளில் மொத்தம் உள்ள 1373 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிட்ட வேட்பாளர்களிலேயே அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் தி.மு.க. வேட்பாளர் தனசேகரன் என்பது குறிப்பிடத்தக்கது. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தனசேகரன் தன்னை வெற்றி பெற செய்த 137-வது வார்டு மக்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

Similar News