உள்ளூர் செய்திகள்
நகை, பணத்துடன் மாயமான கணவரை மீட்டுத்தர போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனைவி மனு
பெருந்துறை அடுத்த தென்முகம் வெள்ளோடு, தண்ணீர்பந்தல், ஞானிபாளையம் பகுதியை சேர்ந்த இந்துமதி (வயது 42). இவர் இன்று போலீஸ் சூப்பிரண்டு அலுவல கத்துக்கு வந்து ஒரு மனு கொடுத்தார்.
ஈரோடு:
பெருந்துறை அடுத்த தென்முகம் வெள்ளோடு, தண்ணீர்பந்தல், ஞானிபாளையம் பகுதியை சேர்ந்த இந்துமதி (வயது 42). இவர் இன்று போலீஸ் சூப்பிரண்டு அலுவல கத்துக்கு வந்து ஒரு மனு கொடுத்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
எனது கணவர் பெயர் ஹரிபாபு. பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். நாங்கள் மேற்கண்ட முகவரியில் வசித்து வந்தோம்.
இந்நிலையில் கடந்த 15.2.2019-ம் ஆண்டு திடீரென எனது கணவர் வீட்டை விட்டு வெளியே சென்றார்.
அவர் வெளியே செல்லும் போது 30 ஆயிரம் பணம், 7 பவுன் நகை, மற்றும் எனக்கு சொந்தமான 1,800 சதுர அடி நில பத்திரத்தையும் எடுத்து சென்றவர் இன்று வரை வீடு திரும்பவில்லை.
அவர் எங்கு சென்றார்? எங்கு போனார்? என தெரியவில்லை.
இதுகுறித்து வெள்ளோடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தேன்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் இன்று வரை போலீசாரும் எனது கணவரை கண்டுபிடித்து தரவில்லை.
போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து கேட்டால் எந்த ஒரு பதிலும் சொல்வதில்லை.
வீட்டில் இருக்கும் ஆடுகளை விற்று செலவு செய்து வருகிறேன். எனது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே மாயமான எனது கணவரையும், நகை பணத்தை மீட்டுத்தர வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.