உள்ளூர் செய்திகள்
குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
அம்மாபேட்டை அருகே இன்று காலை குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பெண்கள் சாலை மறியல் செய்தனர்.
அம்மாபேட்டை:
அம்மாபேட்டை அருகே இன்று காலை குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பெண்கள் சாலை மறியல் செய்தனர்.
அம்மாபேட்டை அருகே உள்ள ஒலகடம் பேரூராட்சி குட்டைமேடு பகுதியில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தினந்தோறும் காலை 6 மணிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் அந்த குடிநீர் போதுமானதாக இல்லை என்று ஏற்கனவே ஒலகடம் பேரூராட்சி அதிகாரிகளிடம் அப்பகுதி பொதுமக்கள் புகார் செய்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 15 நாட்களாக குட்டை மேடு பகுதிக்கு ஆற்று குடிநீர் வரவில்லை என பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இன்று காலை 8 மணி அளவில் பவானி& வெள்ளித்திருப்பூர் மெயின் ரோட்டில் ஒலகடம் அருகே குட்டை மேடு பகுதியில் 30&க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் வெள்ளித்திருப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சம்பந்தப்பட்ட அதிகாரி களிடம் பேசி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பிறகு பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.-
இதனால் அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.