உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

ஈரோடு மாநகராட்சியை ஆளப்போகும் பெண் மேயர் யார்?

Published On 2022-02-23 15:06 IST   |   Update On 2022-02-23 15:06:00 IST
ஈரோடு மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் மாநகராட்சியின் பெண் மேயர் யார்? என பரபரப்பாக விவாதிக்கப் படுகிறது.இதில் பலரது பெயர்கள் அடிபடுகிறது.
ஈரோடு:

ஈரோடு மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் மாநகராட்சியின் பெண் மேயர் யார்? என பரபரப்பாக விவாதிக்கப் படுகிறது.இதில் பலரது பெயர்கள் அடிபடுகிறது. 

ஈரோடு மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் ஏற்கனவே 51--வது வார்டு தி.மு.க. வேட்பாளர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டார். 

இதையடுத்து  59 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. 

இதில் தி.மு.க. 44 வார்டுகளிலும், காங்கிரஸ் 3 வார்டுகளிலும், ம.தி.மு.க. 1 வார்டு என 48 வார்டுகளில் வெற்றி பெற்று ஈரோடு மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது.

ஈரோடு மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் மாநகராட்சியின் பெண் மேயர் யார்? என பரபரப்பாக விவாதிக்கப் படுகிறது.இதில் பலரது பெயர்கள் அடிபடுகிறது. 

மாநகர செயலாளர் சுப்ரமணியத்தின் மனைவி நாகரத்தினம் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் பெயர் மேயர் பதவிக்கு அடிபடுகிறது. 

இதேப்போல் ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் செல்லபொண்ணு வெற்றி பெற்றுள்ளார். 

இவரது பெயரும் மேயர் பதவிக்கு அடிபடுகிறது. இவரது தந்தை அரங்கராசன் ஈரோடு நகராட்சி தலைவராக இருந்தவர்.  

அடுத்து கோகிலாவாணி மணிராஜ் பெயரும் மேயர் பதவிக்கு அடிபடுகிறது. இவர் ஏற்கனவே ஈரோடு யூனியன் தலைவராக இருந்தவர்.  

மல்லிகா நடராஜன் பெயரும் மேயர் பதவிக்கு அடிபடுகிறது. 

இவர் ஏற்கனவே 2 முறை கவுன்சிலராக இருந்து உள்ளார். இவரது கணவர் வி.சி.நடராஜன் பகுதி செயலாளராக இருந்து வருகிறார்.

இதேபோல் நடந்து முடிந்த மாநகராட்சி தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட  கீதாஞ்சலி செந்தில்குமார் மாநகராட்சி வேட்பாளர்களில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று அனை வருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளார். 

இதனால் மேயர் பதவிக்கு இவரது பெயரும் அடிபடுகிறது.

Similar News