உள்ளூர் செய்திகள்
தி.மு.க. கைப்பற்றியது

15 வார்டுகளையும் தி.மு.க. கைப்பற்றியது

Published On 2022-02-22 16:12 IST   |   Update On 2022-02-22 16:12:00 IST
மல்லாங்கிணறு பேருராட்சியில் 15 வார்டுகளையும் தி.மு.க. கைப்பற்றியது.
காரியாபட்டி

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளிலும் தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். வார்டு வாரியாக வெற்றி பெற்றவர்கள் விவரம் வருமாறு:

1-வது வார்டில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் உதயசெல்வியும், 2வது வார்டில் செல்லம்பாளும், 3வது வார்டில் அழகும், 4வது வார்டில் துளசிதாசும், 5வது வார்டில் அனிதாவும் வெற்றி பெற்றனர்.

6&வது வார்டில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் பாலசந்திரனும், 7வது வார்டில் புகழேந்திரனும், 8வது வார்டில் மிக்கேலம் மாளும், 9வது வார்டில் ராஜேஸ்வரியும்,  10வது வார்டில் மகாலிங்கமும் வெற்றி பெற்றனர். 

11வது வார்டில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் கருப்பையாவும், 12வது வார்டில்  செல்வராஜூம், 13வது வார்டில் சுமதியும், 14வது வார்டில் ஜெயச்சந்திரனும், 15வது வார்டில் வைஷ்ணவியும் வெற்றி பெற்றனர்.

இவர்களை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தோல்வியடைந்தனர். இந்த வெற்றியின் மூலம்  மல்லாங் கிணறு பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டு களையும் தி.மு.க. கைப்பற்றி இருக்கிறது என்பது குறிப் பிடத்தக்கது. 

சேத்தூர் பேரூராட்சியில் மொத்தமுள்ள 18 வார்டுகளில் தி.மு.க. 12, இந்திய கம்யூனிஸ்டு, சுயேட்சை, அ.தி.மு.க. தலா 2 இடங்களில் வெற்றி பெற்றன.
செட்டியார்பட்டி பேரூராட்சியில் 15 வார்டுகளில் தி.மு.க. 11 இடங்களை கைப்பற்றியது. சுயேட்சை 3 இடங்களிலும், அ.தி.மு.க. 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

காரியாபட்டி பேரூராட்சியில் 15 வார்டுகளில் தி.மு.க. 11, விடுதலை சிறுத் தைகள் 1, அ.தி.மு.க. 3 வார்டுகளை கைப்பற்றியது. 

மம்சாபுரம் பேரூராட்சியில் மொத்தமுள்ள 18 வார்டுகளில் தி.மு.க. 10, கம்யூனிஸ்டு, காங்கிரஸ், அ.ம.மு.க. தலா 1 வார்டிலும், அ.தி.மு.க. 3 வார்டிலும் வெற்றி பெற்றுள்ளது.

Similar News