உள்ளூர் செய்திகள்
சிவகாசி மாநகராட்சியில் தி.மு.க. முன்னிலை
விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சியில் தி.மு.க. முன்னிலையில் உள்ளது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரே மாநகராட்சி சிவகாசி மாநகராட்சி. சிவகாசி மாநகராட்சியாக உயர்ந்த பிறகு தற்போதுதான் முதல் தேர்தல் நடக்கிறது. இங்கு மொத்தம் 48 வார்டுகள் உள்ளன.
தேர்தலில் 68.47 சதவீதம் வாக்குகள் பதிவாகின. தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட பிரதான கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் தேர்தலில் போட்டியிட்டன. வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணும் மையமான சிவகாசி அரசு கலைக்கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
இந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கு ஓட்டுகள் எண்ணும் பணி தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.காலை 10 மணி நில வரப்படி 6 வார்டுகளில் அ.தி.மு.க.வும், 4 வார்டுகளில் தி.மு.க.வும் வெற்றி பெற்றிருந்தன.
11 மணி நிலவரப்படி தி.மு.க. 10 வார்டுகளிலும், தி.மு.க.வும், அ.தி.மு.க. 8 வார்டுகளிலும் வெற்றி பெற்றிருந்தது. 12 மணி நிலவரப்படி தி.மு.க. 15 வார்டுகளிலும், அ.தி.மு.க. 10 வார்டுகளிலும், காங்கிரஸ் ஒரு வார்டிலும் வெற்றி பெற்றது. 4 வார்டுகளில் சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருந்தனர்.