உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

செல்போனில் படம் பிடித்த நபரை எச்சரித்த அதிகாரிகள்

Published On 2022-02-22 14:59 IST   |   Update On 2022-02-22 14:59:00 IST
ஈரோடு மாநகராட்சியில் பதிவான வாக்குகள் சித்தோடு ஐ.ஆர்.டி.டி. கல்லூரி மையத்தில் எண்ணப்பட்டு வருகிறது. அப்போது ஒளிப்பதிவாளர் ஒருவர் தபால் வாக்கு பிரிக்கும் பணியை தனது செல்போனில் படம் பிடித்தார். இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற அதிகாரிகள் அந்த நபரிடம் செல்போனில் பதிவு செய்யக்கூடாது என எச்சரித்தனர்.
ஈரோடு:

ஈரோடு மாநகராட்சியில் பதிவான வாக்குகள் சித்தோடு ஐ.ஆர்.டி.டி. கல்லூரி மையத்தில் எண்ணப்பட்டு வருகிறது.  

20 வார்டுகளாக பிரிக்கப்பட்டு 3 வளாகத்தில் எண்ணப்பட்டு வருகிறது. 

இன்று காலை 8.05 மணியளவில் 2-வது வளாகத்தில் தபால் வாக்கு பெட்டிகள் மாநகராட்சித் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் முன்னிலையில் பிரிக்கப் பட்டது. 

தபால் வாக்குகள் ஒவ்வொரு வார்டாக பிரிக்கும் பணி நடந்து வந்து கொண்டிருந்தது.

இந்நிலையில் வாக்கு எண்ணும் மையத்திற்குள் செல்போன், எலக்ட்ரானிக் பொருட்கள் எடுத்து செல்ல அனுமதிக்கபடவில்லை. 

வேட்பாளர்கள், முகவர்கள் வாக்கு எண்ணும் அலுவலர்கள் செல்போன்கள் உள்ளே கொண்டு செல்ல அனுமதி இல்லை. 

ஆனால் அதேநேரம் தேர்தல் ஆணையத்தால் வாக்கும் எண்ணும் பணி பதிவு செய்ய ஒளிப்பதி வாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

அப்போது ஒளிப்பதிவாளர் ஒருவர் தபால் வாக்கு பிரிக்கும் பணியை தனது செல்போனில் படம் பிடித்தார். இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற அதிகாரிகள் அந்த நபரிடம் செல்போனில் பதிவு செய்யக்கூடாது என எச்சரித்தனர். 

இதையடுத்து அந்த நபர் செல்போனை சுவிட்ச் ஆப் செய்தார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Similar News