உள்ளூர் செய்திகள்
.

வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி மின்சாரம் தாக்கி சாவு

Published On 2022-02-21 15:57 IST   |   Update On 2022-02-21 15:57:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி மின்சாரம் தாக்கி பலியானார்.
காவேரிப்பட்டணம்:

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த மிட்ட அள்ளி எம்.சவுளூரை சார்ந்தவர் முருகன் (வயது30). இவர் ஜே.சி.பி. ஆபரேட்டராக வேலை செய்து விவசாயமும் கவனித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு 7 மணியளவில்   தனது வீட்டின் அருகே உள்ள சொந்தமான வயலுக்கு மின் மோட்டார் மூலம் நீர் பாய்ச்ச சென்றார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் நீண்ட நேரம் ஆகியும் வராததால் அவரது உறவினர்கள் சென்று பார்த்தனர். முருகன் மயங்கி விழுந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

உடனே அவரை காவேரிப்பட்டினம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து காவேரிப்பட்டணம் போலீஸ் சப்&இன்ஸ் பெக்டர் குணசேகரன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News