உள்ளூர் செய்திகள்
ஓசூரில் நடந்த பல்லக்கு உற்சவத்தில் அலங்கரிக்கப்பட்டு பல்லக்கில் சிறப்பு அலங்காரத்தில் பாபா பக்தர்களுக்கு அருள்

ஓசூர் சந்திர சூடேஸ்வரர் கோவிலில் பல்லக்கு உற்சவம்

Published On 2022-02-21 15:12 IST   |   Update On 2022-02-21 15:12:00 IST
ஓசூர் சந்திர சூடேஸ்வரர் கோவிலில் பல்லக்கு உற்சவம் நடைபெற்றது.
ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், நேற்று இரவு பல்லக்கு உற்சவம் மற்றும் பூ கரகம் நடந்தது.

ஓசூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவில் தேர்த் திருவிழா, அடுத்த (மார்ச்) மாதம் 18-ந் தேதி நடை பெறவுள்ளது. 

தேர்த்திருவிழாவிற்கு முன்னதாக, ஓசூரில் பல்லக்கு உற்சவம் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். 

அந்த வகையில், நேற்று நடந்த விழாவில் ஸ்ரீ விநாயகர், சந்திரசூடேஸ்வரர், மரகதாம்பிகை அம்மன், கோட்டை மாரியம்மன், வெங்கடேஸ்வர சுவாமி, முருகன், தர்ம ராஜசாமி, ராமர், கிருஷ்ண சாமி, துர்க்கை அம்மன், காளி, பாபா, உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட தெய் வங்களை அலங் கரிக்கப்பட்ட பல்லக்குகளில் வைத்து ஓசூர் ராம்நகரிலிருந்து இரவு ஊர்வலம் தொடங்கப் பட்டது.

மேள, தாள வாத்தியம் முழங்க, நையாண்டி ஆட்டம் வாண வேடிக்கைகளுடன் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக பல்லக்கு ஊர்வலம் விடிய,விடிய நடந்தது. 

மேலும் தர்மராஜ சாமி பூ கரகம் நடனமாடியவாறு நகர வீதிகளில் சென்றது. அப்போது பொதுமக்கள் கரகத்திற்கு பூஜைகள் செய்து வழிபட்டனர்.

விழாவில், ஓசூர் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் குளிர் மற்றும் கொட்டும் பனியையும் பொருட் படுத்தாமல் ஆங்காங்கே அமர்ந்து, பல்லக்கு உற்சவம் மற்றும் கரக ஆட்டத்தை கண்டு மகிழ்ந்தனர். முன்னதாக, நேற்று மதியம் ஓசூர் பஸ் நிலை யத்தில், விழாக்குழுவின் சார்பில் பொதுமக்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.

Similar News