உள்ளூர் செய்திகள்
ஆலங்குடியில் கால்நடைக்கான சிறப்பு சுகாதார முகாம் நடை பெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள பாத்தம்பட்டியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
முகாமில், கால்நடை உதவி மருத்துவர் செல்வவிநாயகி கலந்து கொண்டு 450 க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி, குடற்புழு நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், சினைப்பரிசோதனை, மருத்துவ சிகிச்சைகள் மற்றும் ஆண்மை நீக்கம் உள்ளிட்ட சிகிச்சை அளித்தார்.
மேலும் கறவை பசு மாடுகளுக்கு தாது உப்புக்கலவை வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கன்றுகளுக்கான பேரணி நடத்தி சிறந்த முறை யில் வளர்க்கப்பட்ட கிடேரி கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அதே போல் சிறந்த முறையில் கறவை பசுக்களை வளர்த்து வரும் விவசாயி களுக்கு விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இம்முகாமில், கால்நடை ஆய்வாளர்கள் ஆனந்தன், சங்கீதா, கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் அரங்குளவன், மீனாட்சி, ரெங்கசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.