உள்ளூர் செய்திகள்
கைது

சென்னை விமான நிலையத்தில் வங்காளதேச முதியவர் கைது

Published On 2022-02-20 14:48 IST   |   Update On 2022-02-20 14:48:00 IST
துபாய் செல்ல சென்னை விமான நிலையத்திற்கு வந்த வங்காளதேச முதியவரை குடியுரிமை அதிகாரிகள் கைது செய்தனர்.
ஆலந்தூர்:

சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று அதிகாலை துபாய்க்கு செல்ல இருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தின் பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது ரிஸ்வான் கான் (வயது57) என்பவரின் பாஸ்போர்ட்டை சோதனை செய்யும் போது அவர் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள் பாஸ்போர்ட்டை கணினியில் ஆய்வு செய்த போது, அது போலியான பாஸ்போர்ட் என்று தெரியவந்தது.

அவர் வங்காள தேசத்தை சேர்ந்தவர் என்றும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிற்குள் மேற்குவங்க மாநிலம் வழியாக வந்து, திரிபுரா மாநிலம் சென்று அங்கு சில ஏஜென்டுகளிடம் போலியான ஆவணங்கள் மூலம் அகர்தலா முகவரியில் இந்திய பாஸ்போர்ட் பெற்றுள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து குடியுரிமை அதிகாரிகள் வங்காள தேசத்தை சேர்ந்த ரிஸ்வான் கானை கைது செய்தனர்.

Similar News