உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

புதுக்கோட்டை மாவட்டத்தில் கூடுதல் நேரத்தில் அதிக வாக்குப்பதிவால் சர்ச்சை

Published On 2022-02-20 13:40 IST   |   Update On 2022-02-20 13:40:00 IST
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கூடுதல் நேரத்தில் அதிக அளவிலான வாக்குகள் பதிவானது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 69.61 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. காலையில் மந்தமாக தொடங்கிய  வாக்குப்பதிவு பிற்பகலில் விறுவிறுப்படைந்தது.

மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.

அதன்படி மாவட்டம் முழுவதும் மாலை 5 மணி வரை 68.77 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது. அடுத்த 1 மணி நேரத்தில் 0.84  சதவீதம் வாக்குகள் பதிவாகி இருப்பது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்றாளர்கள் சொற்ப எண்ணிக்கையில் இருக்கும் போது சுமார் 2 ஆயிரம் பேர் வாக்களித்தது எப்படி  என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது.

இதுபற்றி அதிகாரிகளிடம் கேட்டபோது,  சாதாரண வாக்காளர்கள் பலரும் டோக்கன்  பெற்று  அந்த அடிப்படையில் தங்களது வாக்கினை செலுத்தி இருப்பதாக தெரிவித்தனர். அதிலும் குறிப்பாக புதுக்கோட்டை நகராட்சி 17 மற்றும் 18 வார்டுகளில் அதிக வாக்குகள் பதிவாகி இருப்பது பலருக்கு சந் தேகத்தை ஏற்படுத்தி இருக்கி றது.

மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வாக்காளர்களுக்கு முறையாக பூத் சிலிப் வழங்காததால் பொது மக்கள் தாங்கள் எங்கு சென்று எந்த மையத்தில் வாக்களிக்க வேண்டும் என்ற குழப்பத்தில் தவித்தனர்.

இதனால் வாக்கு  சதவீதம் குறைந்து விட்டதாகவும்   தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேபோல் பல்வேறு மையங்களில் இறந்தவர்களின் பெயர்கள் இன்னும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

Similar News