உள்ளூர் செய்திகள்
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள காஞ்சிபுரம், ஆவடி, தாம்பரம் மாநகராட்சிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 1677 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 200 வாக்குசாவடிகள் பதட்டமான வாக்குசாவடிகளாக கண்டறியப்பட்டு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 வார்டுகளில் 50 வார்டுகளும், குன்றத்தூர் நகராட்சியில் 30 வார்டுகளும், மாங்காடு நகராட்சியில் 27 வார்டுகளும், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் 15 வார்டுகளும், வாலாஜாபாத் பேரூராட்சியில் 15 வார்டுகளும், உத்திரமேரூர் பேரூராட்சியில் 18 வார்டுகளும் என மொத்தம் 155 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது.
மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 76 ஆயிரத்து 257பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 87 ஆயிரத்து 338 பேரும் என 3 லட்சத்து 63 ஆயிரத்து 652 பேர் வாக்களிக்க உள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் 384 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 88 பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டு 29 நுண்பார்வையாளர்கள் நியக்கப்பட்டும், வெப்கேமரா மூலம் தொடர்ந்து வாக்குப்பதிவு கண்காணிக்கப்படுகின்றது.
தேர்தல் பாதுகாப்பு பணியில் 1056 போலீசார் ஈடுபட்டு உள்ளனர். இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.சுதாகர் தலைமையில் இரண்டு ஏடிஎஸ்பி, எட்டு டி.எஸ்.பி.20 ஆய்வாளர்கள், 100 எஸ்.ஐ என மொத்தமாக 1056 காவல்துறையினர் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் 23 நடமாடும் கண்காணிப்பு குழு வாகனங்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளன.
காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் 218 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 1 லட்சத்து 7 ஆயிரத்து 448 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 15 ஆயிரத்து 203 பெண் வாக்காளர்களும், 29 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2 லட்சத்து 22 ஆயிரத்து 680 பேர் வாக்களிக்கிறார்கள்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில் 50 வார்டுக்கு மட்டுமே இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காஞ்சிபுரம் மாநகராட்சி 36வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் தற்கொலை செய்துகொண்டதால் அந்த வார்டுக்கு மட்டும் தேர்தல் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு மையத்திற்கு வருகை புரியும் வாக்காளர்களுக்கு வாக்குப்பதிவு அறைக்கு செல்லும் முன்னதாக கொரோனா தடுப்பு நடவடிக்கையாக உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு கிருமி நாசினி மற்றும் கையுறை வழங்கப்பட்டது.
வாக்காளர்கள் காலை முதலே ஆர்வத்துடன் வந்து வாக்களித்து வருகிறார்கள்.
ஆவடி மாநகராட்சியில் 48 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி, பாஜக உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என்று 396 பேர் போட்டியிடுகின்றனர்.
மாநகராட்சி முழுவதும் 350 பூத்துகளில் 21, 22, 34, 27, 29, 47 பதற்றமானவை என்று கண்டறியப்பட்டது. கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. காலையிலேயே ஏராளமானோர் வாக்களிக்க அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஓட்டுக்களை பதிவு செய்தனர். திருநின்றவூர் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.

வாக்களிக்கும் மின்னணு எந்திரம் பழுதடையாமல் கண்காணிக்க ஒவ்வொரு நகராட்சி, பேரூராட்சிக்கும் 10 பொறியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 75 க்கும் மேற்பட்ட தேர்தல் பார்வையாளர்கள் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் தனது மனைவியுடன் செங்கல்பட்டு, அனுமந்தபொத்தேரியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அப்போது கலெக்டர் ராகுல்நாத் கூறும்போது, வாக்கு மையங்களில் இருந்து ஓட்டுப்பதிவு எந்திரங்களை அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படும். வாக்கு எண்ணும் மையத்தில் 5 அடுக்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றார்.
தாம்பரம் மாநகராட்சியில் மொத்தம் 70 வார்டுகள் உள்ளன. இந்த 70 வார்டுகளிலும் 683 பேர் உறுப்பினர் பதவிகளுக்காக போட்டியிடுகின்றனர். தாம்பரம் மாநகராட்சி முழுவதும் 703 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 67 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டு போலீசார் கண்காணித்து வருகின்றனர். 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் காலை முதலே ஆர்வத்துடன் வந்து வாக்களித்து வருகிறார்கள்.
மாமல்லபுரம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் இன்று காலை வாக்காளர்களின் உடல் வெப்பத்தை பரிசோதிக்கும் கருவி வேலை செய்யவில்லை. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த கருவி சரி செய்யப்பட்டது.
குன்றத்தூர் நகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டு களிலும் வாக்காளர்கள் காலை முதலே ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். குன்றத்தூர் நகராட்சிக்குட்பட்ட வள்ளுவர் நடுநிலைப் பள்ளியில் ஏராளமான பொதுமக்கள் அதிக அளவில் வரிசையில் நின்று தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் குன்றத்தூரில் உள்ள வள்ளுவர் நடுநிலைப்பள்ளியில் தனது வாக்கினை செலுத்தினார்.