உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

மதுபாட்டில்களை கடத்தி விற்ற 2 பேர் கைது

Published On 2022-02-19 12:25 IST   |   Update On 2022-02-19 12:25:00 IST
ஆலங்குடியில் மதுபாட்டில்களை கடத்தி விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் திருட்டுத் தனமாக மதுபானம் கடத்தி விற்பனை  செய்வதாக புதுக்கோட்டை   மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் நிஷாபார்த்திபனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதைத்தொடர்ந்து உதவி ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு ஆலங்குடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

அப்போது  ஆலங்குடி வம்பன் பாப்பம் பட்டியை சேர்ந்த பழனிச்சாமி வயது 60 மற்றும் மேலக்கரும்பிரான்கோட்டை சேர்ந்த சுபாஷ்  27 ஆகியோர் மதுபானங்களை கடத்தி விற்பனை செய்வது தெரிய வந்தது. 

இதைத் தொடர்ந்து போலீசார்  பழனிசாமி மற்றும் சுபாஷ் ஆகியோரை  கைது செய்து  அவர்களிமிருந்து 27 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.14,790 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இது குறித்து ஆலங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Similar News