உள்ளூர் செய்திகள்
அய்யனார் கோவிலில் தெப்பத்திருவிழா நடந்த போது எடுத்த படம்.

அய்யனார் கோவிலில் தெப்பத்திருவிழா

Published On 2022-02-19 12:19 IST   |   Update On 2022-02-19 12:19:00 IST
ஆலங்குடி குளமங்கலம் அய்யனார் கோவிலில் தெப்பத்திருவிழா நடை பெற்றது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள குளமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவிலில் நடைபெற்று வந்த திருவிழா மாசிமக தெப்பத் திருவிழாவுடன் நிறைவு பெற்றது.

விழாவை முன்னிட்டு கோவில் அருகில் உள்ள குளத்தில் தெப்பம் தயாரிக்கப்பட்டது. பின்னர் சிவாச்சாரியார்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் உற்சவரை தெப்பத்தில் எழுந்தருள செய்தனர். 

பல வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பம் கோவில் சன்னதிக்கு முன் புறத்திலிருந்து குளத்தின் நான்கு கரைகளையும் சுற்றி வந்தது. இரவு சுமார் 9 மணிக்கு சுற்ற ஆரம்பித்தது காலை 5.00 மணி அளவில் தெப்பம் நிலைக்கு வந்தது.

தெப்பத்திருவிழாவை காண சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.

Similar News