உள்ளூர் செய்திகள்
அய்யனார் கோவிலில் மாசிமக பெருவிழா நடைபெற்ற போது எடுத்த படம்.

குளமங்கலத்தில் அய்யனார் கோவிலில் மாசிமக திருவிழா

Published On 2022-02-18 14:16 IST   |   Update On 2022-02-18 14:16:00 IST
ஆலங்குடி குளமங்கலத்தில் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவிலில் மாசிமக திருவிழா நடை பெற்றது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை  ஆலங்குடி அருகே உள்ள குளமங்கலத்தில் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மகத்தன்று திருவிழா நடை பெறுவது வழக்கம்.  அது போல் இவ்வாண்டும் மாசி திருவிழா 2 தினங்களாக நடை பெற்று வருகிறது.

குளமங்கலம் அய்யனார் கோவில் முன்பு ஆசிய கண்டத்திலேயே மிக உயரமான 32 அடி உயரமுள்ள குதிரை சிலை உள்ளது. குதிரை சிலைக்கு முன்பு உள்ள காலத்தில் மலர் மாலைகள் பிறகு பிளாஸ்டிக்  மாலைகள் அணிவிக்கப்பட்டு  வந்தன. பின்னர் சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருதி சில காலங்களாக காகிதப் பூ மாலைகள் அணிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மாசிமக திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாட்டில் பலமாவடங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் ஆட்டோக்கள், கார்களில் காகிதப் பூ மாலைகளை ஏற்றிக்கொண்டு  நேற்று காலை முதல் சாரை சரையாக அய்யனார் கோவிலுக்கு வந்து குதிரை சிலைக்கு மாலை அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பின்னர் அய்யனாருக்கு பால், பன்னீர் தயிர்விபூதி போன்ற 16 வகையான அபிஷேகங்கள் நடை பெற்றன.  அதனைதொடர்ந்து அய்யனாருக்கு சந்த னகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடை பெற்றது.

திருவிழாவை காண கீரமங்கலம், மேற்பனைக் காடு, கொத்தமங்கலம், பனங்குளம், அறந்தாங்கி மற்றும் சுற்று வட்டாரமாவட் டங்கள் மற்றும் கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்திருந்தனர். மேலும் இன்று தெப்பத் திருவிழா நடை பெற உள்ளது.

பாதுகாப்பு பணிகளை கீரமங்கலம் காவல் ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையில் ஆலங்குடி வடகாடு போலீசார் பாதுகாப்பு பணியில் கவனித்து வருகின்றனர்.

Similar News