உள்ளூர் செய்திகள்
தொழிற்பள்ளிகள் துவங்குவதற்கு கால நீட்டிப்பு
தொழிற்பள்ளிகள் துவங்குவதற்கான கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி தெரிவித்தார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
2022 - 2023 ஆம் கல்வியாண்டிற்கு ஜனவரி 02.01.2022 முதல் 30.04.2022 நள்ளிரவு 11.59 முடிய புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகார நீட்டிப்பு மற்றும் கூடுதல் தொழிற் பிரிவுகள் மற்றும் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் www.skilltraining.in.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 30.04.2022 இதற்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். சென்னை மண்டல பயிற்சி இணை இயக்குநர் அலுவலகத்தை தொலைபேசி: 044-22501006 என்ற எண்ணில் தொடர்பு கொண்டும் விவரம் பெறலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.