உள்ளூர் செய்திகள்
தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி முதியவர் பலி
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி முதியவர் பலியானார்.
காவேரிப்பட்டணம்:
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள ஜெகதாப் அடுத்துள்ள கெட்டூர் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது69). இவர் விவசாயம் செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மதியம் இவர் காவேரிப்பட்டணம் தென்பெண்ணை ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது கால் இடறி ஆற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தார். இதில் தலையில் அடிபட்டு தங்கவேல் இறந்து கிடந்தார்.
இது குறித்து காவேரிப்பட்டணம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆற்றில் இறந்து கிடந்த தங்கவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.