உள்ளூர் செய்திகள்
ராஜபாளையம் சொக்கர் கோவிலில் மாசி திருவிழாவையொட்டி தெப்ப உற்சவம் நடந்தது.
ராஜபாளையம்
ராஜபாளையத்தில் ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர்.வெங்கட்ராமராஜா பரம்பரை அறங்காவலராக பொறுப்பு வகிக்கும் புதுப்பாளையம் சொக்கர் என்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் மாசிமக மகா பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது.
கடந்த 7-ந் தேதி திருவிழா தொடங்கியது. 8ம் நாள் விழாவான நேற்று தெப்ப உற்சவ விழா நடத்தப்பட்டது. கோவிலுக்கு பின்புறம் அமைந்துள்ள மானசரோவர் திருக்குளத்தில் சொக்கநாதர் மீனாட்சி அலங்கார தெப்பத்தில் எழுந்தருளி 7 முறை வலம் வந்தனர்.
வாத்திய மேளதாளங்களுடன் திருமுறை மன்றம், பஞ்சோபசார குழு, சைவசித்தாந்த சபை மற்றும் சங்கரன்கோவில் அடியார்கள் குழு கலந்து கொண்டு பாடல்கள் பாடி தெப்போற்சவ வலம் நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து---கொண்டு சுவாமியை வழிபட்டனர்.