உள்ளூர் செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசு பஸ் கண்டக்டர் விஷ மாத்திரை தின்று தற்கொலை செய்துகொண்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் நாச்சியார்பட்டியை சேர்ந்தவர் பத்மநாபன்(வயது 49). இவருக்கு பிரமிளா என்ற மனைவியும், கோபிகண்ணன் மற்றும் தினேஷ்குமார் ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.
பத்மநாபன் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார். அவர் கடந்த 10 ஆண்டுகளாக சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மதியம் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தபோது வாந்தி எடுத்துள்ளார். அதுகுறித்து மனைவி கேட்டபோது, தென்னைமரத்துக்கு வைக்கும் விஷமாத்திரைகளை தின்றுவிட்டதாக கூறியிருக்கிறார்.
இதையடுத்து அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த பத்மநாபன் சிகிச்சை பலனின்றி இறந்தார். சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்ததால் விஷ மாத்திரைகளை தின்று அவர் தற்கொலை செய்து கொண்டாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.