உள்ளூர் செய்திகள்
நெமிலியில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் மறியல்
நெமிலி அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் மறியலில் ஈடுபட்டனர்.
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சிருனமல்லி, புதேரி ஆகிய கிராமங்கலுக்கு குடிநீர் வழங்கும் போர்வெல் மோட்டார்கள் ஏரியில் உள்ளதால் அவை கடந்த பல மாதமாக பெய்த கனமழை காரணமாக போர்வெல் மோட்டார்கள் நீரில் முழ்கியது.
இதனால் பல மாதமாக சிருனமல்லி, புதேரி ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபட்டது.
அதே பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவரின் போர்வெல் பம்பு செட்டில் இருந்து குடிநீர் வினியோகம் செய்து வந்தனர்.
10 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் விடுவதால் பெண்களிடையே அடிக்கடி சண்டை ஏற்படுகிறது ஊராட்சி மன்ற தலைவர் இதனை கண்டு கொள்ள வில்லை என கூறி 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன்ச £லை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.