உள்ளூர் செய்திகள்
பஸ்சில் சென்ற மூதாட்டியிடம் 22 பவுன் நகைகள் அபேஸ்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பஸ்சில் சென்ற மூதாட்டியிடம் 22 பவுன் நகைகள் அபேஸ் செய்யப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மகாராஜாபுரத்தைச் சேர்ந்தவர் கோவிந்தம்மாள் (வயது 60). இவர்தனது மகள் மகாலட்சுமியுடன் கடந்த 6-ந் தேதி ராஜபாளையத்தில் இருக்கும் அக்காவின் பேத்திக்கு நடந்த திருமண நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொள்வதற்காக அரசு பஸ்சில் சென்றார்.
வத்திராயிருப்பு வந்து அங்கிருந்து ஸ்ரீவில்லிபுத் தூருக்கு பஸ்சில் ஏறி பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து மம்சாபுரம் வழியாக ராஜபாளையம் செல்லும் இலவச மகளிர் பஸ்சில் செல்லும்போது அவர் வைத்திருந்த கைப்பையில் இருந்த மணிபர்சில் 18 பவுன் நகை மற்றும் 4 பவுன் 2 தங்க வளையல்கள் வைத் திருந்தார். அதை யாரோ அபேஸ் செய்து விட்டனர்.
ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட்டில் இறங்கி ஆவாரம்பட்டியில் உள்ள அவரது தங்கை வீட்டுக்கு நடந்தே வீட்டிற்கு சென்றதாகவும், அந்த வீட்டில் வைத்து பார்த்தபோது மணி பர்ஸ் மற்றும் அதில் இருந்த சுமார் 22 பவுன் நகைகள் காணாமல் போனது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.