உள்ளூர் செய்திகள்
நிதி உதவி

நீட் தேர்வில் வென்ற ஏழை மாணவருக்கு நிதி உதவி

Published On 2022-02-12 17:09 IST   |   Update On 2022-02-12 17:09:00 IST
ராஜபாளையத்தில் நீட் தேர்வில் வென்ற ஏழை மாணவருக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.
ராஜபாளையம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் செவல்பட்டி தெருவில்  உள்ள ரேணுகாதேவி தொடக்கப்பள்ளியில் படித்த மாணவர்  சுந்தரேசுவரன்.  

இவர் நீட் தேர்வில் 331 ரேங்க் பெற்று கோவை தனியார் கல்லூரியில் மருத்துவ இடம் ஒதுக்கீடு கிடைக்கப் பெற்றார். இவர் தந்தை கூலி தொழிலாளியானதால் அவரால் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் அளவிற்கு வசதி செய்து கொடுக்க இயலவில்லை.  இதை அறிந்த பள்ளி நிர்வாகம் முன்னாள் தலைவர் சுப்புராம், தற்போதைய தலைவர் மனோகரன் ஆகியோர் பள்ளிக்கு மாணவனின் பெற்றோரை அழைத்தனர். அங்கு நடந்த பெற்றோர்&ஆசிரியர் சங்கக் கூட்டத்தில் பெற்றோருக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர். 

பின்னர் மாணவர் சுந்தரேசுவரனுக்கு நிதி உதவியும் வழங்கினார். பள்ளி தாளாளர் ரவிக்குமார், முன்னாள் தாளாளர் பலராம், தலைமையாசிரியை பிரபா, ஊர் தலைவர் ஜெயச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டு சாதனை மாணவரை பாராட்டினர். 

Similar News