உள்ளூர் செய்திகள்
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் “கிராமப்புற இந்தியாவின் இணையவழி கல்வியின் சவால்கள் மற்றும் தீர்வுகள்“ என்ற தலைப்பில் கருத்தரங்கு 2 நாட்கள் இணையவழியில் நடந்தது.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் உள்தர உத்தரவாத அமைப்பு, பெங்களூரு தேசியதர மதிப்பீட்டு குழுவின் நிதி உதவியுடன் “கிராமப்புற இந்தியாவின் இணையவழி கல்வியின் சவால்கள் மற்றும் தீர்வுகள்“ என்ற தலைப்பில் கருத்தரங்கு 2 நாட்கள் இணையவழியில் நடந்தது.
முதல்வர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கி னார். துணை முதல்வர் பாலமுருகன், முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினர். 2 நாட்கள் கருத்தரங்கு 4 அமர்வுகளாக நடந்தது. முதல் நாள் அமர்வில் காந்தி கிராம கிராமிய பல் கலைக்கழகத்தின் வேதியி யல் துறை பேராசிரியர் சேதுராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு “கிராமப்புற இந்தியாவின் கல்வியில் கொரோனாவின் தாக்கம்“ என்ற தலைப்பில் பேசினார்.
2ம் அமர்வில் குஜராத் பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல்துறை பேராசிரியர் ஜோதி பரீக் “நவீன கல்வி முறையின் நன்மை&தீமைகள்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
3ம் அமர்வில் பெங்களூரு கிறிஸ்ட் பல்கலைக்கழகத்தின் வணிகவியல் துறை உதவி பேராசிரியர் ஹரீஷ் “இணையவழி கல்வி முறையில் கிராமப்புற இந்தியா சந்திக்கும் சவால்கள்” என்ற தலைப்பில் பேசினார்.
4ம் அமர்வில் கேரள பல்கலைக்கழகத்தின் மேலாண்மையியல் துறைத்தலைவர் கே.எஸ். சந்திரசேகர் “கிராமப்புற இந்தியா&இணையவழி கல்வி முறையில் சந்திக்கும் சவால்களுக்கான தீர்வுகள்” என்ற தலைப்பில் பேசினார்.
இந்த கருத்தரங்கு இணையவழி கல்வி முறையில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன என்றும் கால மாற்றத்துக்கு ஏற்ப கல்வி முறையியலும் மாற்றம் ஏற்படும்.
எனவே இந்த வகை கல்வி முறைக்கு நம்மை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக் கப்பட்டது. மாணவர்கள் கூடுதல் கவனம் செலுத்தி இணையவழி கல்வியில் ஈடுபட வேண்டும் என்றும் அறிவுறுத்தபப்பட்டது.
உள்தர உத்தரவாத அமைப்பின் ஒருங்கிணைப் பாளர் பிரியா ஒருங் கிணைத்து நடத்தினார். இந்த நிகழ்வில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 85 பேராசிரியர்கள் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். 98 பேர் இணைய வழியில் பங்கேற்று பயன டைந்தனர்.