உள்ளூர் செய்திகள்
வேலூரில் வாக்குப்பதிவு எந்திரங்களில் பேட்டரி மாற்றம்
வேலூர் மாநகராட்சியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் பேட்டரிகள் மாற்றம் செய்யப்பட்டது.
வேலூர்:
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்காளர்கள் வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 28-ந்தேதி தொடங்கியது.
இதையடுத்து வேட்புமனு பரிசீலனை முடிவடைந்து வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டது. 2 வார்டுகளில் போட்டியின்றி கவுன்சிலர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
வேலூர் மாநகராட்சியில் மீதமுள்ள 58 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நேற்று தொடங்கியது. இன்று 2-வது நாளாக பணிகள் நடந்தது
வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணியை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் மற்றும் மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் ஆகியோர் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது ஓட்டுப்போடும் ஒரு எந்திரத்தில் பொருத்தப்பட்டிருந்த பேட்டரி பழுதாகி இருந்தது.
பழுதான பேட்டரி உடனடியாக மாற்ற கலெக்டர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அந்த எந்திரத்தில் பேட்டரி மாற்றப்பட்டது. இதேபோல் மற்ற எந்திரங்களில் பேட்டரி பழுதாகி உள்ளதா? எனவும் பரிசோதித்து வருகின்றனர்.
இதையடுத்து வேட்பாளர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி தொடர்ந்து நடந்தது.