உள்ளூர் செய்திகள்
மும்பை வாலிபரிடம் ரூ.82 ஆயிரம் பறிமுதல்
வேலூர் பறக்கும் படை சோதனையில் மும்பை வாலிபரிடம் ரூ.82 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
வேலூர்:
வேலூர் மாநகராட்சி தேர்தலையொட்டி பணம் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
இன்று காலை சத்துவாச்சாரி ஆர்.டி.ஓ ஆபீஸ் சாலை சந்திப்பில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது மும்பையை சேர்ந்த சுவரத் (வயது30). என்பவர் பைக்கில் வந்தார். அவர் வைத்திருந்த பையில் பறக்கும் படையினர் சோதனையிட்டனர்.
அதில் ரூ.82,500 பணம் இருந்தது. தொழில் சம்பந்தமாக பணத்தை எடுத்து வந்ததாக கூறினார்.ஆனாலும் உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்தனர்.
மாநகராட்சி கமிஷனர் அசோக்குமாரிடம் பணத்தை ஒப்படைத்தனர். உரிய ஆவணங்கள் காட்டினால் பணம் திரும்ப ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.