உள்ளூர் செய்திகள்
அருப்புக்கோட்டையில் போலீசாரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது.

போலீசார் கொடி அணிவகுப்பு

Published On 2022-02-11 15:33 IST   |   Update On 2022-02-11 15:33:00 IST
அருப்புக்கோட்டையில் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடந்தது.
அருப்புக்கோட்டை

தமிழகத்தில் வருகிற 19ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  இந்த நிலையில் அருப்புக் கோட்டை நகர்மன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் துணை போலீஸ் சூப்பிரண்டு சகாயஜோஸ் தலைமையில் போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர். 

பேண்டு வாத்தியங்களுடன் சொக்கலிங்கபுரத்தில் தொடங்கிய இந்த அணிவகுப்பு வெள்ளைக்கோட்டை, எம்.எஸ். கார்னர், பழையபஸ்நிலையம், மதுரைரோடு உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று புதிய பஸ் நிலையத்தில் நிறைவடைந்தது.

இந்த பேரணியில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுடலைமணி, மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி, சப்இன்ஸ்பெக்டர்கள், போலீசார்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News