உள்ளூர் செய்திகள்
வழக்குப்பதிவு

தேர்தல் விதிகளை மீறிய பா.ஜனதாவினர் மீது வழக்குப்பதிவு

Published On 2022-02-10 14:41 IST   |   Update On 2022-02-10 14:41:00 IST
விருதுநகரில் தேர்தல் விதிகளை மீறியதாக பா.ஜனதாவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விருதுநகர்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதற்காக தேர்தல் நடத்தை விதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனை மீறுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

விருதுநகரில் நேற்று பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது தேர்தல் விதிகள் மீறப்பட்டதாகவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது.

இதேபோல் ராமமூர்த்தி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் அண்ணாமலை பங்கேற்ற கூட்டத்திலும் விதிமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது-. இதுகுறித்து விருதுநகர் கிழக்கு போலீசில் நகராட்சி தேர்தல் பறக்கும்படை பொறுப்பு அதிகாரி ரமணன்  புகார் கொடுத்தார். 

அதன்பேரில் விருதுநகர் கிழக்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் கஜேந்திரன், பொறுப்பாளர் பாண்டுரங்கன், மண்டப உரிமையாளர் மதியழகன், பொறுப்பாளர் இன்பராஜன் ஆகியோர் மீது  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News