உள்ளூர் செய்திகள்
வெங்காய வியாபாரியிடம் பணம் பறிமுதல்
ராஜபாளையத்தில் நடந்த வாகன சோதனையில் வெங்காயம் வாங்க சென்ற வியாபாரியிடம் ரூ.1 லட்சம் கைப்பற்றப்பட்டது
ராஜபாளையம்
உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ராஜபாளையம் புதிய பஸ் நிலையம் அருகே குடிமை பொருள் வழங்கல் துறை வட்டாட்சியர் ராமநாதன், சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணிராஜ் ஆகியோர் கொண்ட பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போதுஅந்த வழியாக வாகனத்தில் வந்த திருச்சி முசிறியை சேர்ந்த ஆனந்தராஜை மறித்து சோதனை செய்தனர். அப்போது அவர் ஆவணமின்றி ரூ. 1 லட்சத்து 24 ஆயிரத்து 260-ஐ கொண்டு சென்றதாக கூறி அதனை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் ஆனந்தராஜ் நாமக்கல்லில் இருந்து தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதிக்கு வெங்காயம் வாங்க பணம் கொண்டு செல்வது தெரியவந்தது.
தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தமிழகம் முழுவதும் பறக்கும்படையினர் நடத்தும் சோதனையில் அத்தியாவசிய தேவைக்காக வியாபாரிகள், பொதுமக்கள் எடுத்துச்செல்லும் பணத்தை மட்டும் பறிமுதல் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.