குன்றத்தூர் அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸ்காரர் வாகனம் மோதி பலி
பூந்தமல்லி:
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் நாராயணன் (வயது 23). குன்றத்தூர் போலீஸ் நிலையத்தில் குற்றப் பிரிவு போலீசாக பணிபுரிந்து வந்தார்.
நேற்று இரவு அவர் மோட்டார் சைக்கிளில் ரோந்து பணியில் ஈடுபட்டார். சிறுகளத்தூர் அருகே, குன்றத்தூர்- ஸ்ரீபெரும்புதூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் போலீஸ்காரர் நாராயணன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் தூக்கி வீசப்பட்டதில் தலையில் பலத்த காயம் அடைந்த நாராயணன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
தகவல் அறிந்தும் குன்றத்தூர் போலீசார் விரைந்து வந்து பலியான நாராயணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விபத்து ஏற்படுத்திய வாகனத்தை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.