உள்ளூர் செய்திகள்
உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையங்கள் அறிவிப்பு
விருதுநகர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களை மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
விருதுநகர்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
வாக்குப்பதிவு முடிந்ததும் அனைத்து வாக்கு பெட்டிகள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. 22ந்தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன. விருதுநகர் மாவட்டத்தில் முதல்முறையாக சிவகாசி மாநகராட்சியாக தேர்தலை சந்திக்கிறது.
இங்கு பதிவாகும் வாக்குகள் சிவகாசி அவுசிங்போர்டு பகுதியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வைத்து எண்ணப்படுகின்றன. இதேபோல் நகராட்சிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
அருப்புக்கோட்டை நகராட்சி வார்டுகளுக்கு உட்பட்ட வாக்குகள் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியிலும், சாத்தூர் நகராட்சிக்கான வாக்குகள் எத்தல் ஆர்.வி.மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும், ராஜபாளையம் நகராட்சி வாக்குகள் பி.ஏ.சி.ராமசாமிராஜா பாலிடெக்னிக்கிலும் வைத்து எண்ணப்படுகின்றன.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி வாக்குகள் வி.பி.எம். மகளிர் கல்லூரியிலும், விருதுநகர் நகராட்சி வாக்குகள் வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரியிலும் எண்ணப்படுகின்றன.
இதேபோல் மாவட்டத்தில் உள்ள செட்டியார்பட்டி, மம்சாபுரம், சாத்தூர் பேரூராட்சிகளின் வாக்கு எண் ணிக்கை ராஜபாளையம் எஸ்.எஸ்.அரசு மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. காரியாபட்டி, மல்லாங்கிணறு பேரூராட்சிகளின் வாக்கு எண்ணிக்கை மல்லாங்கிணறு அரசு மேல் நிலைப்பள்ளியில் நடக்கிறது-.
எஸ்.கொடிக்குளம், சுந்தரபாண்டியம், வ.புதுப்பட்டி, வத்ராயிருப்பு பேரூராட்சிகளுக்கான வாக்குகள் கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் கலைக்கல்லூரியில் வைத்து எண்ணப்படுகிறது.
இந்த தகவலை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.