உள்ளூர் செய்திகள்
.

1.4 டன் ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது

Published On 2022-02-07 15:42 IST   |   Update On 2022-02-07 15:42:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியில் பதுக்கி வைத்திருந்த 1.4 டன் ரேஷன் அரிசியை போலீசார் கைப்பற்றினர்.
தேன்கனிக்கோட்டை:

அஞ்செட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து அதிகளவில் ரேஷன் அரிசி கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதையடுத்து கிருஷ்ணகிரி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று காலை, அஞ்செட்டி பகுதியில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். 

அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்தவரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அவர் ரேஷன் அரிசி கடத்தி சென்றது தெரிந்தது. விசாரணையில்  அவர், அஞ்செட்டி அடுத்த தேவன்தொட்டி பகுதியை சேர்ந்த வீரபத்திரப்பா (வயது 71) என்பதும், அஞ்செட்டி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, கர்நாடகா மாநிலத்தில் அதிக விலைக்கு விற்பதற்காக தன் வீட்டின் பின்புறம் பதுக்கி வைத்திருப்பதும் தெரிந்தது. 

இதையடுத்து அவரது வீட்டின் பின்புறம் பதுக்கி வைத்திருந்த, 1,400 ரேஷன் அரிசி, மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார் வீரபத்திரப்பாவை கைது செய்தனர்.

Similar News