உள்ளூர் செய்திகள்
துப்பாக்கி

ஈரோடு மாவட்டத்தில் 951 துப்பாக்கிகள் போலீஸ் நிலையத்தில் ஒப்படைப்பு

Published On 2022-02-07 15:32 IST   |   Update On 2022-02-07 15:32:00 IST
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி ஈரோடு மாவட்டத்தில் பிஸ்டல், ரைபிள், ஒற்றை மற்றும் இரட்டை குழல் என 951 துப்பாக்கிகளை இதுவரை அதன் உரிமையாளர்கள் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து உள்ளனர்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19-ந் தேதியும், வாக்கு எண்ணிக்கை 22-ந் தேதியும் நடைபெற உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் 1,447 துப்பாக்கிகள் உரிமம் பெற்று அதன் உரிமையாளர்கள் தற்காப்பிற்காக வைத்துள்ளனர். தேர்தலை யொட்டி உரிமம் பெற்று துப்பாக்கி வைத்துள்ளவர்கள் அவற்றை அருகில் உள்ள போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என தேர்தல் அலுவலர் மூலம் அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது.

இதன்பேரில், ஈரோடு மாவட்டத்தில் பிஸ்டல், ரைபிள், ஒற்றை மற்றும் இரட்டை குழல் என 951 துப்பாக்கிகளை இதுவரை அதன் உரிமையாளர்கள் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து உள்ளனர். அதனை போலீசார் கைப்பற்றி, அதற்குரிய பாதுகாப்பு மையத்திலும் ஒப்படைத்தனர்.

மேலும், வங்கி பாதுகாப்பிற்காக 45 துப்பாக்கிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிகள் பயன்பாட்டுக்கு வங்கி நிர்வாகங்கள் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News