உள்ளூர் செய்திகள்
விதிகளை மீறி அதிக மாணவர்களை ஏற்றிச்சென்றால் நடவடிக்கை வாகன ஓட்டிகளுக்கு போலீசார் எச்சரிக்கை
பயணத்தின் போது அனைவரும் முகக்கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் பெற்றோர் சிலர் தங்கள் குழந்தைகளை பள்ளி வாகனங்கள், ஆட்டோக்களில் பள்ளிக்கு அனுப்புகின்றனர். இவற்றில் சில வாகனங்கள், மாணவர்களை அழைத்துச்செல்லும் அளவுக்கு தகுதியற்று காணப்படுகிறது.
அதேபோல் ஆட்டோக்களில் அவ்வப்போது மாணவிகளை கும்பலாக அமர்த்தி அழைத்து செல்லப்படுவதும் அதிகரித்துள்ளது. வாகனங்களின் இருக்கைத்திறனை விட அதிக எண்ணிக்கையில் மாணவிகள் அமர்த்தப்படுவதால், அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
இது தவிர கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுவதில்லை எனவும் புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து போலீசார் கூறியதாவது:-
பயணத்தின் போது அனைவரும் முகக்கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை ஆட்டோவில் அமர்த்தக்கூடாது. விதிமீறி செயல்படுவது கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
விதிமீறும் வாகன ஓட்டுனர்களிடம் முறையான ஆவணங்கள் இல்லாதிருந்தால், வழக்குப்பதிவும் செய்யப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.