உள்ளூர் செய்திகள்
கொரோனாவுக்கு மூதாட்டி பலியானார்.
புதுச்சேரி:
புதுவையில் 2 ஆயிரத்து 254 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
இதில் புதிதாக 344 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 224, காரைக்காலில் 74, ஏனாமில் 39, மாகியில் 7 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுவையில் 78, காரைக்காலில் 22, ஏனாமில் 6, மாகியில் 8 பேர் என 114 பேர் தொற்றுடன் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுவையில் 755, காரைக்காலில் 337, ஏனாமில் 69, மாகியில் 10 பேர் என ஆயிரத்து 171 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். புதுவை மாநிலத்தில் ஒட்டு மொத் தமாக இதுவரை ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 907 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 330 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர்.
புதுவையில் 2 ஆயிரத்து 794, காரைக்காலில் ஆயிரத்து 420, ஏனாமில் 270, மாகியில் 32 பேர் என 4 ஆயிரத்து 516 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். புதுவை மாநிலத்தில் இப்போது 4 ஆயிரத்து 630 பேர் கொரோனா தொற்றுடன் உள்ளனர். புதுவை பத்மினி நகரை சேர்ந்த 96 வயது மூதாட்டி கொரோனா சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 947 ஆக உயர்ந்துள்ளது.
புதுவையில் 2&வது தவணை உட்பட 15 லட்சத்து 41 ஆயிரத்து 422 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இத்தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.