உள்ளூர் செய்திகள்
தொழிலாளி போலீசில் சரண்

கள்ளக்காதலிக்கு அரிவாள் வெட்டு- போலீசில் தொழிலாளி சரண்

Published On 2022-02-04 16:37 IST   |   Update On 2022-02-04 16:37:00 IST
கள்ளக்காதலியை தொழிலாளி வெட்டி கொலை செய்ய முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகேயுள்ள சோனாரஹள்ளி பகுதியை சேர்ந்தவர் சக்தி. இவரது மனைவி பார்வதி (வயது40). இவர்களுக்கு சர்மா, சதீஷ் குமார் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். பார்வதியின் கணவர் ஏற்கனவே இறந்து விட்டார்.

இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்தவர் முருகன் (45), இவருக்கு பார்வதி தங்கை உறவு முறை ஆகும். முருகனின் மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் இவர் தனியாக வசித்து வந்தார்.

முருகன், பார்வதி வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தார். கணவன் இல்லாமல் தனியாக தவித்து வந்த பார்வதிக்கு அவ்வப்போது பண உதவியும் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. பார்வதி, தங்கை உறவு முறை என்று கூட பாராமல் உல்லாசமாக இருந்து வந்தார். கடந்த 10 வருடங்களாக இவர்களின் கள்ளக்காதல் நீடித்து வந்தது.

இந்த நிலையில் பார்வதிக்கு, முருகனுடன் வைத்திருந்த கள்ளத்தொடர்பு கசந்தது. இதனால் வேறு ஒரு வாலிபரிடம் பார்வதி நெருங்கி பழகி வந்துள்ளார்.

இதனை அறிந்த முருகன் பல முறை பார்வதியை கண்டித்துள்ளார். ஆனால் அவரின் பேச்சை கேட்காமல் தொடர்ந்து அந்த வாலிபரிடம் கள்ளத்தொடர்பு நீடித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த முருகன் இன்று காலை அந்த பகுதியில் உள்ள ஒரு ஓட்டல் முன்பு பார்வதியை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் கழுத்து, மார்பு, முதுகு, தலை உள்பட பல இடங்களில் பார்வதிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே படுகாயம் அடைந்த பார்வ தியை மீட்டு சிகிச்சைக்காக மத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து முருகன் மத்தூர் போலீசில் சரண் அடைந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேறொரு வாலிபருடன் தொடர்பு வைத்திருந்த கள்ளக்காதலியை தொழிலாளி வெட்டி கொலை செய்ய முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Similar News