உள்ளூர் செய்திகள்
முருங்கப்பாக்கம்-வில்லியனூர் இடையே ரூ.8 கோடி செலவில் தார் சாலை அமைக்கும் பணி
முருங்கப்பாக்கம்-வில்லியனூர் இடையே ரூ.8 கோடி செலவில் தார் சாலை அமைக்கும் பணியை அமைச்சர் லட்சுமி நாராயணன்-சிவா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தனர்.
புதுச்சேரி:
புதுவை முருங்கப்பாக்கம் திரவுபதி அம்மன் கோவிலில் தொடங்கி வில்லியனூர் கண்ணகி பள்ளி வரை உள்ள சாலை மேம்படுத்தப்படுகிறது.
மேலும் வில்லியனூர் தொகுதிக்குட்பட்ட பாப்பாஞ்சாவடி தொடங்கி கொம்பாக்கம் வழியாக கொம்பாக்கம்பேட், ஒதியம்பட்டு, கே.வி. நகர், உத்திரவானிப்பேட், அம்பேத்கர் நகர், திரு வள்ளுவர் நகர், லூர்து நகர், வில்லியனூர் வரை உள்ள 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு 10 மீட்டர் அகலத்தில் ரூ. 8 கோடியே 56 லட்சத்து 94 ஆயிரம் மதிப்பீட்டில் பொதுப்பணித்துறை மூலம் பக்க வாய்க்காலுடன் கூடிய புதிய மேம்படுத்தப்பட்ட தார் சாலை அமைக்கப்படுகிறது.
இப்பணிக்கான பூமி பூஜை விழா நடந்தது. சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் சிவா எம்.எல்..ஏ தலைமையில் அமைச்சர் லட்சுமிநாராயணன் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணியினை பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், அரசு செயலர் அருண், பொதுப் பணித்துறை தலைமை பொறியார் சத்தியமூர்த்தி, செயற்பொறியாளர் ராஜ சேகரன், உதவிப் பொறியாளர் ராமமூர்த்தி, இளநிலைப் பொறியாளர் திருமுருகன் மற்றும் தி.மு.க. தொகுதி செயலாளர் ராமசாமி, கொம்பாக்கம் தேவநாதன், வேலுபடையாச்சி, ஜெய பால், ஜெகன், ஜனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.