உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

எம்.பி.பி.எஸ். சேர்க்கை தாமதம் ஏன்?- ஜிப்மர் நிர்வாகம் விளக்கம்

Published On 2022-02-04 10:36 IST   |   Update On 2022-02-04 10:36:00 IST
எம்.பி.பி.எஸ். சேர்க்கை தாமதம் ஏன்?- என்பது குறித்து ஜிப்மர் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
புதுச்சேரி:

புதுவை ஜிப்மர் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., சேர்க்கை, சான்றிதழ் சரிபார்ப்பு முனனறிவிப்பு இன்றி, கடைசி நேரத்தில் ஒத்தி வைத்ததால்  பெற்றோர்கள், மாணவர்கள் சிரமப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.  எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு இந்திய அரசின் மருத்துவ மற்றும்  குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மருத்துவ கலந்தாய்வு கமிட்டியால் கையாளப்படுகிறது. தகுதி பட்டியல் ஒத்திவைப்பது,  மாற்றியமைப்பது மருத்துவ கலந்தாய்வு குழுவின் கட்டுப்பாட்டில் உள்ளது. 

தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் விவரங்களை ஜிப்மர் நிர்வாகத்திற்கு வழங்கிய பின்னரே, சேர்க்கை நடைமுறை அல்லது சான்றிதழ் சரிபார்ப்பை நடத்த முடியும். இந்த விவரங்கள் மருத்துவ  கருத்துரை செயற்குழுவின் இணையதளத்தில் கிடைக்கிறது.
 
எம்.பி.பி.எஸ். சேர்க்கை தொடர்பான எந்த செயலையும் ஜிப்மர் தன்னிச்சையாக நடத்த முடியாது. இதுதொடர்பான எந்தக் குறையையும் மருத்துவ கலந்தாய்வு கமிட்டிற்கு தெரிவிக்கப்பட வேண்டும். பெற்றோர்களும் மாணவர்களும் மருத்துவ கலந்தாய்வு கமிட்டியின் அறிவிப்பை பெற்ற பிறகு ஜிப்மரை அணுகலாம். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News