உள்ளூர் செய்திகள்
இறந்து கிடந்த ஆண் யானை.

அஞ்செட்டி வனப்பகுதியில் ஆண் யானை சாவு

Published On 2022-02-03 15:17 IST   |   Update On 2022-02-03 15:17:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வனப்பகுதியில் இறந்து கிடந்த ஆண் யானை குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.
தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வனச்சரத்திற்கு உட்பட்ட தக்கட்டி செல்லும் சாலையில் உள்ள உப்பராணி காப்பு காட்டில் நேற்று வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். 

அப்போது அங்குள்ள செடி கொடிகளின் நடுவில் யானை ஒன்று இறந்து கிடப்பதை கண்டு திடுக்கிட்டனர். அங்கு சென்று பார்த்ததில் 25 வயது மதிக்கத்தக்க ஆண் யானை என்பது தெரியவந்தது.

இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர் தகவலையடுத்து மாவட்ட வன அலுவலர் கார்த்திகாயினி மருத்துவ குழுவினருக்கு தகவல் தெரிவித்தார். கால்நடை மருத்துவர்கள், வன ஊழியர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் ஆகியோர் விரைந்து சென்று யானையின் உடலை மீட்டனர். தொடர்ந்து கால்நடை மருத்துவரால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அங்கேயே யானை உடல் புதைக்கப்பட்டது. யானை உடல்நலக்குறைவால் இருந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் கடந்த வாரம் அஞ்செட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட மஞ்சி காப்புக் காட்டில் ஆண் யானை ஒன்று மற்ற யானையுடன் மோதிக்கொண்டதில் பாறையில் இருந்து தவறி விழுந்து இறந்தது குறிப்பிடத்தக்கது. இப்பகுதியில் அடிக்கடி யானைகள் பலியாவதை சமூக ஆர்வலர்கள் வேதனை கூடிய அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் யானைகள் பலியாவதை தடுக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Similar News