உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

ஈரோடு மாவட்டத்தில் 14 இடங்களில் ஓட்டு எண்ணிக்கை நடத்த ஏற்பாடு

Published On 2022-02-03 15:08 IST   |   Update On 2022-02-03 15:08:00 IST
ஈரோடு மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் ஓட்டு எண்ணிக்கை 14 இடங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் ஓட்டு எண்ணிக்கை 14 இடங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக வரும் 19&ந் தேதி நடைபெற உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 4 நகராட்சி, 42 பேரூராட்சிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் 14 இடங்களில் வாக்கு எண்ண ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அதன்படி ஈரோடு மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் பதிவாகும் வாக்குகளை எண்ண சித்தோட்டில் உள்ள ஐ.ஆர்.டி.டி. மையம் அமைக்கப்பட்டுள்ளது. 

இதேபோல் பவானி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பதிவாகும் வாக்குகளை பவானி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் எண்ண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பதிவாகும் வாக்குகள் கோபிசெட்டி பாளையம் வைர விழா உயர்நிலைப்பள்ளியில் உள்ள கே.எம்.ஆர். ஹாலில் எண்ணப்படுகிறது.  

சத்தியமங்கலம் நகராட்சிக்குட்பட்ட பகுதி களில் பதிவாகும் வாக்குகள் சத்தியமங்கலம் காமதேனு கலை அறிவியல் கல்லூரியில் எண்ணப்படுகிறது. புஞ்சைபுளியம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பதிவாகும் வாக்குகள் புஞ்சை புளியம் பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் எண்ணப்படுகிறது.

இதேபோல் சித்தோடு, நசியனூர் பேரூராட்சிகளில் பதிவாகும் வாக்குகள் சித்தோடு வாசவி கலை மற்றும் அறிவியல் கல்லூரி யிலும், அவல்பூந்துறை, சிவகிரி, கொல்லன் கோவில், மொடக்குறிச்சி, வடுகப்பட்டி, அரச்சலூர் ஆகிய பேரூராட்சிகளில் பதிவாகும் வாக்குகள் மொடக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும்,

கொடுமுடி, சென்னசமுத்திரம், வெங்கம்பூர், கிளாம்பாடி, பாசூர், ஊஞ்சலூர், வெள்ளோட்டம்பரப்பு ஆகிய பேரூராட்சிகளில் பதிவாகும் வாக்குகள் கொடுமுடி ஸ்ரீசங்கரா வித்யாலயா பெண்கள் உயர்நிலைப்பள்ளியிலும், பெத்தாம்பாளையம், பெருந்துறை, கருமாண்டி செல்லிபாளையம், நல்லாம்பட்டி, காஞ்சிகோவில், பழைய பாளையம், சென்னிமலை ஆகிய பேரூராட்சிகளில் பதிவாகும் வாக்குகள் பெருந்துறை கொங்கு வேளாளர் மெட்ரிக் உயர்நிலைப்பள்ளியிலும், 

ஆப்பக்கூடல், ஜம்பை, மேட்டுப்பாளையம், சலங்கபாளையம் ஆகிய பேரூராட்சிகளில் பதிவாகும் வாக்குகள் பவானி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், அந்தியூர், அத்தாணி, நெருஞ்சிப்பேட்டை, அம்மாபேட்டை, ஒலகடம் அதிக பேரூராட்சிகளில் பதிவாகும் வாக்குகள் அந்தியூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், லக்கம்பட்டி,கூகலூர், காசி பாளையம், நம்பியூர், எலத்தூர், கொளப்பலூர் ஆகிய பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் கோபிசெட்டிபாளையம்  கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், அரியப்பம்பாளையம், பெரியகொடிவேரி, வாணிபுதூர், கெம்பநாயக்கன்பாளையம் ஆகிய பேரூராட்சியில் பதிவாகும் வாக்குகள் சத்தியமங்கலம் காமதேனு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், பவானிசாகர் பேரூராட்சியில் பதிவாகும் வாக்குகள் பவானிசாகர் ஹோலி ரீடி மெர்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளி என ஈரோடு மாவட்டம் முழுவதும் 14 இடங்களில் வரும் 22&ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. அன்று மதியம் முதல் முடிவுகள் வெளியாகும்.

Similar News