உள்ளூர் செய்திகள்
இடிபாடுகளில் சிக்கிய விவசாயி உடலை பொதுமக்கள் மீட்ட காட்சி.

சரக்கு ஆட்டோ-லாரி நேருக்கு நேர் மோதி விவசாயி பலி

Published On 2022-02-03 14:52 IST   |   Update On 2022-02-03 14:52:00 IST
புஞ்சைபுளியம்பட்டி அருகே சரக்கு ஆட்டோ-லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் விவசாயி பலியானார்.
பு.புளியம்பட்டி:

புஞ்சைபுளியம்பட்டி அருகே சரக்கு ஆட்டோ-லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் விவசாயி பலியானார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள முதியானூர் பகுதியை சேர்ந்தவர் சிவகணேசன் (60). விவசாயி.

இவர் தனது தோட்டத்தில் விளைந்த வெங்காயத்தினை விற்பனை செய்ய கோவை மாவட்டம் உக்கடம் காய்கறி மார்க்கெட் கொண்டு செல்வதற்காக அந்தியூர் மறவன்குட்டை பகுதியை சேர்ந்த மணிகண்டன் (24) என்பவர் சரக்கு ஆட்டோ வில் ஏற்றிக்கொண்டு சென்றார்.  சரக்கு ஆட்டோ வை மணிகண்டன் ஒட்ட அருகில் சிவகணேசன் அமர்ந்து இருந்தார்.

சம்பவத்தன்று இரவு அந்தியூரில் இருந்து புறப்பட்டு கோவை செல்லும் வழியில் புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள புங்கம்பள்ளி அருகே வந்தபோது எதிரே வந்த  லாரி மீது சரக்கு ஆட்டோ நேருக்கு நேர் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே விவசாயி சிவகணேசன் பரிதாபமாக இறந்தார். 

பின்னர் இடிபாடுகளில் சிக்கியிருந்த சிவகணேசன் உடலை அருகில் இருந்த பொதுமக்கள் போராடி மீட்டனர். டிரைவர் மணிகன்டன் காயத்துடன் உயிர் தப்பினார்.

சம்பவ இடத்துக்கு வந்த புஞ்சைபுளியம்பட்டி போலீசார் சிவகணேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News