உள்ளூர் செய்திகள்
நினைவு தினம்- காஞ்சிபுரம் அண்ணா நினைவு இல்லத்தில் கலெக்டர் மரியாதை
காஞ்சிபுரத்தில் அண்ணா வாழ்ந்து மறைந்த அவரது நினைவு இல்லத்தில் உள்ள திருஉருவ சிலைக்கு மாவட்ட கலெக்டர் ஆர்த்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
காஞ்சிபுரம்:
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் 53-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இதையொட்டி காஞ்சிபுரத்தில் அண்ணா வாழ்ந்து மறைந்த அவரது நினைவு இல்லத்தில் உள்ள திருஉருவ சிலைக்கு மாவட்ட கலெக்டர் ஆர்த்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ. சாலவாக்கத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். காஞ்சிபுரம் எம்.எல்.ஏ. வக்கீல் எழிலரசன், அண்ணா நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நகர செயலாளர் சன் பிரான்ட் ஆறுமுகம், மாவட்ட அவைத்தலைவர் சேகரன், இளைஞரணி அமைப்பாளர் துணை செயலாளர்கள் யுவராஜ், டாக்டர் சோபன்குமார், மாணவரணி அமைப்பாளர் அபுசாலி, ஏ.வி.சுரேஷ்குமார், ராம்பிரசாத், பொதுக்குழு உறுப்பினர் செங்குட்டுவன், ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.குமார், குமணன், சாலவாக்கம் குமார், ஞானசேகரன், பூபாலன், வி.எஸ்.ராமகிருஷ்ணன் எம்.எஸ்.சுகுமார், தசரதன், நகர அவைத்தலைவர் சந்துரு, துணைசெயலாளர் ஜெகன்னாதன் கருணா நிதி, பொருளாளர் வெங்கடேசன் மற்றும் எஸ்.கே.பி.சீனிவாசன், சாட்சி சண்முக சுந்தரம் சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதே போல் எழிலரசன் எம்.எல்.ஏ. திருக்கச்சி நம்பி தெருவில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகமான கலைஞர் பவள விழா மாளிகையில் உள்ள அண்ணா, கலைஞர் கருணாநிதி உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் தலைமையில் அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் கணேசன், காஞ்சி பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் அண்ணா நினைவில்லத்தில் அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ம.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் வளையாபதி தலைமையில் நகர செயலாளர் மகேஷ், ஏகாம்பரம், அருள், வெங்கடேசன் உள்ளிட்ட பலர் நினைவில்லத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தே.மு.தி.க. சார்பில் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் நிர்வாகிகள் ஏகாம்பரம், குமார், வனஜா மரியாதை செலுத்தினர்.