உள்ளூர் செய்திகள்
காய்கறி வியாபாரி வீட்டில் நகை, பணம் கொள்ளை: வீட்டுக்கு பெயிண்ட் அடிக்க வந்த 2 தொழிலாளிகள் சிக்கினர்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் காய்கறி வியாபாரி வீட்டில் நகை, பணம் திருடிய 2 பெயிண்டர்களை போலீசார் கைது செய்தனர்.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தேர் பேட்டை பகுதியை சேர்ந்தவர் உதயசூரியன் (வயது 55 )இவர் காய்கறி கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி அன்று உதயசூரியன் வீட்டிற்கு தேன்கனிக்கோட்டை அருகே லக்க சந்திரம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ் (45) , திம்மசந்திரம் கிராமத்தை சேர்ந்த முருகேஷ் (43) ஆகிய இருவரும் பெயிண்ட் அடிக்க வந்துள்ளனர். பெயிண்ட் அடித்து விட்டு வீட்டில் பீரோவில் இருந்த 2 பவுன் தங்க நகை மற்றும் ஒரு லட்சம் பணம் ஆகியவற்றை திருடி விட்டுச் சென்றனர்.
பின்னர் வீட்டிற்கு வந்த உதயசூரியன் பீரோவைத் திறந்து பார்த்துள்ளார். பீரோவில் இருந்த நகை, பணம் ஆகியவை திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து தேன்கனிக் கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்&இன்ஸ்பெக்டர் தினேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் பெயிண்ட் அடிக்க வந்தவர்கள் இருவரையும் பிடித்து விசாரணை செய்ததில் நகையும் பணமும் திருடியதை ஒப்புக்கொண்டனர். உடனே 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த இரண்டு போல் தங்க நகையும் 40 ஆயிரம் ரூபாய் பணமும் பறிமுதல் செய்தனர். மீதி பணம் 60 ஆயிரம் செலவு செய்துவிட்டதாக கூறினர். பின்னர் கைது செய்த இருவரையும் ஓசூர் சிறையில் அடைத்தனர்
வீட்டிற்கு பெயிண்ட் அடிக்க வந்த தொழிளாளர்கள் 2 பேர் பணமும் நகையும் திருடிய சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.