உள்ளூர் செய்திகள்
விபத்து

உத்திரமேரூரில் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் சிறுவன் பலி

Published On 2022-02-01 09:17 IST   |   Update On 2022-02-01 09:17:00 IST
உத்திரமேரூரில் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் சிறுவன் பலியான சம்பவம் தொடர்பாக கார் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
உத்திரமேரூர்:

உத்திரமேரூர் ஒன்றியம் ராவத்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரி. இவரது மகன் அஸ்வித் (வயது 11). இவர் களியாம்பூண்டியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று அஸ்வித் ராவத்தநல்லூரிலிருந்து சைக்கிளில் காரணி மண்டபம் என்னும் பகுதிக்கு வந்துவிட்டு மீண்டும் திரும்பிச் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரது பின்னால் வந்த கார் குறுக்கே வந்த நாய் மீது மோதாமல் தவிர்ப்பதற்காக திருப்பியபோது அஸ்வித் ஓட்டி சென்ற சைக்கிள் மீது மோதியது. இதனால் தூக்கி வீசப்பட்ட அஸ்வித் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுபற்றி பெருநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. உத்திரமேரூர் இன்ஸ்பெக்டர் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரை தேடி வருகின்றனர்.

Similar News