உள்ளூர் செய்திகள்
திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் சிவராத்திரி வழிபாடு நடந்த போது எடுத்த படம்.

திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் சிவராத்திரி வழிபாடு

Published On 2022-01-31 15:59 IST   |   Update On 2022-01-31 16:02:00 IST
திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் சிவராத்திரி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு மாலை 6 மணிக்கு மூலவர் வீரட்டானேஸ்வரருக்கு பால், தேன், தயிர், பன்னீர், சந்தனம், திருநீறு மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் நடைபெற்றது.
பண்ருட்டி:

பின்னர் வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்து தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சரக்கொன்றை நாதர், பஞ்சமுகலிங்கம் உள்ளிட்ட லிங்கதிருமேனிகளுக்கு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அருகம்புல், பூ சாற்றியபின் வில்வத்தால் அர்ச்சனை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் சீனுவாசன், உற்சவதாரர்கள், சிவனடியார்கள், சிவ தொண்டர்கள் செய்திருந்தனர்.

Similar News