உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 464 பேருக்கு கொரோனா

Published On 2022-01-31 15:26 IST   |   Update On 2022-01-31 15:26:00 IST
கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 464 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி:

கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிதாக 464 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. இதன் பலனாக தற்போது பாதிப்பு குறைந்து வருகிறது. 

இதே போல குமரி மாவட்டத்திலும் தினசரி கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைய தொடங்கி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆயிரத்தை தாண்டி காணப்பட்ட கொரோனா பாதிப்பு நேற்று 464 ஆக குறைந்துள்ளது. 

அதாவது குமரி மாவட்டத்தில் நேற்று ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி மூலமாகவும், சோதனை சாவடிகள் மற்றும் களப்பணியாளர்கள் மூலமாகவும் மொத்தம் 3143 பேருக்கு சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் மொத்தம் 464 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் அதிகபட்சமாக நாகர்கோவில் மாநகரில் மட்டும் 92  பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

இதே போல அகஸ்தீஸ்வரம்-58, கிள்ளியூர்-24, குருந்தன் கோடு -50, மேல்புறம்-30, முன்சிறை-81, ராஜாக்கமங்கலம்-11, திருவட்டார்-49, தோவாளை-34, தக்கலை-30 மற்றும் திருநெல்வேலியில் இருந்து வந்த ஒருவருக்கும், கேரளாவில் இருந்து வந்த 3 பேருக்கும், சிவகங்கையில் இருந்து வந்த ஒருவருக்கும் என மொத்தம் 464 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 77 ஆயிரத்து 955 ஆக உயர்ந்துள்ளது. இதில் நோய் தொற்று அதிகம் உள்ளவர்கள் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியிலும், தொற்று பாதிப்பு குறைவாக உள்ளவர்கள் வீடுகளிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

அந்த வகையில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் 51 பேரும், கொரோனா கவனிப்பு மையங்கள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் 238 பேரும் வீட்டு தனிமையில் 3120 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் உடல் நிலையை அப்பகுதி சுகாதார ஆய்வாளர்கள் நேரில் சென்று பார்வையிட்டு வருகிறார்கள். 
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா பரவல் வேகம் குறைந்து இருப்பதால் மக்கள் சற்று நிம்மதி அடைத்துள்ளனர். 

மேலும் பாதிப்பு குறைந்து வருவதால் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ஆகியவை வாபஸ் பெறப்பட்டுள்ளன. மேலும் அனைத்து நாட்களிலும் ஆலயங்களுக்குச் சென்று வழிபடவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. 

அதோடு நாளை முதல் பள்ளிகளை திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

Similar News