உள்ளூர் செய்திகள்
தேன்கனிக்கோட்டையில் பா.ஜனதா பிரமுகரின் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் பா.ஜனதா பிரமுகரின் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பிரசாத் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீராமன் (வயது 45). இவர் கிருஷ்ணகிரி மாவட்ட பா.ஜனதா மீனவர் அணி தலைவராக இருந்து வருகிறார். மேலும் ஹாலோ பிளாக் செங்கல் சூளையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு வீட்டில் தூங்க சென் றுள்ளார். நள்ளிரவில் மோட்டார் சைக்கிள்தீப்பிடித்து எரிவதை பார்த்து கூச்சலிட்டுள்ளார் இந்த கூச்சலை கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த தண்ணீரால் அனைத்தனர்.
இது தொடர்பாக தேன்கனிக் கோட்டை போலீஸ் நிலையத்தில் ஸ்ரீராமன் அளித்த புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக யாரேனும், மோட்டார் சைக்கிளுக்கு தீ வைக்கப்பட்டதா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.