உள்ளூர் செய்திகள்
தொலைபேசி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை

Published On 2022-01-31 13:00 IST   |   Update On 2022-01-31 13:00:00 IST
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, பொதுமக்கள் தங்களது புகார் மற்றும் குறைகளை தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கலாம்.

காஞ்சிபுரம:

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழுவதும் தயார் நிலையில் உள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இதற்காக காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- காஞ்சிபுரம் மாவட்ட நகர்ப்புற பகுதிகளில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்.044-2723 7423 மற்றும் 044-2723 7690 செயல்பட்டு வருகிறது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, பொதுமக்கள் தங்களது புகார் மற்றும் குறைகளை மேற்குறிப்பிட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Similar News