உள்ளூர் செய்திகள்
சைக்கிளிங் செல்வோர் அதிகரிப்பு

மு.க.ஸ்டாலின் அடிக்கடி பயிற்சிக்கு செல்வதால் விழிப்புணர்வு- கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிளிங் செல்வோர் அதிகரிப்பு

Published On 2022-01-30 15:34 IST   |   Update On 2022-01-30 15:34:00 IST
முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் செல்லும் அதே பாதையில் ஏராளமானோர் விரும்பி சைக்கிளிங் சென்று வருகின்றனர்.

மாமல்லபுரம்:

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவ்வப்போது உடற்பயிற்சிக்காக கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிள் பயணம் மேற்கொள்கிறார்.

அதேபோல் வீட்டில் உள்ள நவீன உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மு.க.ஸ்டாலின் உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைதலங்களில் வைரலாக பரவியது.

இந்த நிலையில் இன்று காலை மு.க.ஸ்டாலின் கிழக்கு கடற்கரை சாலையில் உத்தண்டி சுங்கச்சாவடி முதல் மாமல்லபுரம் வரை சைக்கிள் ஓட்டி சென்றார். அவருடன் அதிகாரிகள் தனித்தனி சைக்கிளில் சென்றனர். மு.க.ஸ்டாலின் சைக்கிள் பயணத்தால் கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிளிங் செல்வோர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

இதற்கு முன்பு கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிளிங் செய்வோரின் எண்ணிக்கை குறைந்த அளவே இருக்கும்.

ஆனால் இப்போது சைக்கிளிங் செல்வோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது. முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் செல்லும் அதே பாதையில் ஏராள மானோர் விரும்பி சைக்கிளிங் சென்று வருகின்றனர்.

இன்று காலை ஏராளமானோர் தனித்தனி குழுக்களாக கிழக்கு கடற்கரை சாலையில் சைக் கிளிங் சென்றனர். பின்னர் அவர்கள் மாமல்லபுரம் புரதான சின்னங்கள் முன்பு நின்று செல்போனில் செல்பி எடுத்துக்கொண்டனர்.

Similar News