உள்ளூர் செய்திகள்
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் வர்ணம் தீட்டும் பணி நடைபெற்ற போது எடுத்த படம்.

6-ந்தேதி கும்பாபிஷேகம்: விருத்தகிரீஸ்வரர் கோவிலில் வர்ணம் தீட்டும் பணி மும்முரம்

Published On 2022-01-29 15:59 IST   |   Update On 2022-01-29 15:59:00 IST
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் முதல் கட்டமாக அனுக்ஞை விக்னேஷ்வர பூஜைகளுடன் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் மற்றும் யாகசாலை பூஜைகள் முடிவடைந்துள்ளன.
விருத்தாசலம்:

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் 20 வருடங்களுக்குப் பிறகு வருகிற 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இதற்காக கோபுரங்கள், கொடி மரங்கள், சுவாமி சன்னதிகள், பிரகாரங்கள் உள்ளிட்ட புனரமைப்பு பணிகள் முடிவடைந்தன. அதைத்தொடர்ந்து விருத்தாம்பிகை அம்மன் கருவறை கோபுரம் வர்ணம் தீட்டும் பணிகள் முடிவடையும் கட்டத்தில் உள்ளது.

முதல் கட்டமாக அனுக்ஞை விக்னேஷ்வர பூஜைகளுடன் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் மற்றும் யாகசாலை பூஜைகள் முடிவடைந்துள்ளன. தொடர்ந்து மூலவருக்கு கருவறை கோபுரம் வர்ணம் தீட்டி முடிவடைந்துள்ளது. இதில் கும்பாபிஷேக கமிட்டி நிர்வாகிகள், அறநிலையத்துறை ஊழியர்கள், சிவாச்சாரியார்கள் கடுமையாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News